பிரிஸ்பேன் கோட்டையை 33 ஆண்டுகளுக்குப் பிறகு தகர்த்த இளம் இந்தியப் படை!

Must read

கடந்த 1988ம் ஆண்டு முதல், பிரிஸ்பேனில் நடைபெறும் எந்த டெஸ்ட் போட்டியிலும் தோற்றதில்லை என்ற ஆஸ்திரேலிய அணியின் பெருமை, இன்று தவிடுபொடியாகியுள்ளது.

கடந்த 1988ம் ஆண்டு, விவியன் ரிச்சர்ட்ஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றது. அப்போது பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியில், ஆஸ்திரேலியாவை வென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி.

அந்தப் பெருமையை, இப்போது விவியன் ரிச்சர்ட்ஸ் உடன் பகிர்ந்து கொண்டுள்ளார் அஜின்கியா ரஹானே. அவரின் தலைமையிலான இளம் இந்திய அணி, 33 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிஸ்பேன் கோட்டையை தகர்த்துள்ளது.

ஐந்தாம் நாள் ஆட்டத்தில், பிரிஸ்பேன் மைதானம் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கலாம் என்று எச்சரிக்கப்பட்ட நிலையிலும், அதையெல்லாம் பொருட்படுத்தாத இந்திய இளம் படை, ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிவிட்டது.

 

 

 

More articles

Latest article