ஹராரே: மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக தோனி தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கிறது.
2010ம் ஆண்டு ஜிம்பாப்வே தொடருக்கு சுரேஷ் ரெய்னா தலைமையில் சென்ற இந்திய அணி முத்தரப்பு தொடரில் தோல்வியை தழுவியது, 2013ம் ஆண்டு தொடரை விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வென்றது. 2015ம் ஆண்டில் ரஹானே தலைமையில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி சூடியது.
11-1465633957-india-zimbabwe345-600
தற்போது தோனி தலைமையில் இந்திய அணி ஜிம்பாவேயில் பயணம் செய்து வருகிறது. விராட் கோஹ்லி, ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், அஸ்வின், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா- ஜிம்பாப்வே இடையிலான ஒரு நாள் போட்டி ஹராரே நகரில் இன்று ஆரம்பித்தது.  டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி ஜிம்பாப்வே அணியை பேட்டிங் செய்து பணித்தார்.
இந்திய அணியில் கே.எல் ராகுல், யுஸ்வேந்திரா சஹால், கருண் நாயர் ஆகியோர் அறிமுக வீரர்களாக களம் இறங்கியுள்ளார்கள்.
5 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் இழந்து 49 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.