மும்பை: எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டத்தின் 2வது நாள் கூட்டம் மும்பையில் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய கூட்டத்தில் 63 தலைவர்கள் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்றைய கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

இரண்டு நாள் நடைபெறும் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் நேற்று இரவு தொடங்கியது. அதைத்தொடர்ந்து 2வது நாள் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில்,  28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.  இருந்தாலும், இன்று இந்தியா கூட்டணியில்  மேலும் 9 கட்சிகள் சேர உள்ளன என தகவல்கள் வெளியாகி உள்ளது.

2024ம் ஆண்டு  நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ், திமுக உள்பட பல எதிர்க்கட்சிகள் இணைந்து  I.N.D.I.A என்ற  பெயரில் கூட்டணியை உருவாக்கி உள்ளனர். இந்த அமைப்பின் இரண்டு ஆலோசனை  கூட்டங்கள் ஏற்கனவே பீகார் மாநிலம் பாட்னா மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற நிலையில் அடுத்த கூட்டம் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்று வருகிறது.

ஆகஸ்ட் 31  மாலை முதல்நாள் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று ( செப்டம்பர் 1) 2வது நாள் ஆலோசனை கூட்டம்   கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் இந்திய கூட்டணியின் லோகோவும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று இந்தியா கூட்டணியின் அனைத்து தலைவர்களும் இணைந்து குழு புகைப்படம் எடுத்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல், காந்தி, மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தாபானர்ஜி, திமுகவின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், உத்தவ்தாக்ரே, அரவிந்த் கெஜ்ரிவால், நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், சரத் பவார், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர் .தக்கது.

இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றுள்ள நிலையில், மேலும் 9 கட்சிகள் சேர உள்ளன என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Video: Thanks ANI