கொல்கத்தா

ந்தியா மற்றும் வங்கதேசம் இடையில் புதிய பயணிகள் ரெயில் சேவை இன்று துவங்கப்பட்ட்டுள்ளது.

கொல்கத்தாவில் இருந்து வங்க தேசத்தின் குல்னா நகருக்கு செல்லும் பயணிகள் ரெயில் சேவை திட்டம் இன்று துவங்கப்பட்டது.  வாரத்துக்கு ஒரு முறை இயக்கப்படும் இந்த ரெயிலுக்கு பந்தன் எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.   முற்றிலும் குளிர்பதன வசதி செய்யப்பட்டுள்ள இந்த ரெயில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் செயல்படும்.

இன்று வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் கொல்கத்தா நகரில் இந்த ரெயில்வே சேவை துவங்கப்பட்டது.  பிரதமர் மோடி, வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்துக் கொண்டு கொடி அசைத்து துவங்கி வைத்தனர்.  அத்துடன் வங்க தேசத்தில் மேக்னா மற்றும் டைடஸ் நதிகளில் கட்டப்பட்ட இரு பாலங்களும் இதே நிகழ்ச்சியில் திறந்து வைக்கப்பட்டது.

மோடி தனது உரையில் இந்திய வங்கதேச நட்பு மேலும் பலப்படுத்துள்ளதாக கூறி உள்ளார். ஷேக் ஹசீனா ரெயில் சேவை மற்றும் இரு பாலங்கள் திறக்கப்பட்ட இந்த நாள் இரு நாட்டின் நட்புறவில் முக்கியமான ஒரு நாள் எனக் கூறினர்.  மம்தா பானர்ஜியும் இதே கருத்தை கூறி உள்ளார்.

இந்த ரெயில் சேவையை முன்னிட்டு கொல்கத்தா ரெயில் நிலையத்தில் கஸ்டம்ஸ் மற்றும் இமிக்ரேஷன் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.