சென்னை:

ந்தியா-ஆஸ்திரேலியா நட்பு கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்தியா அணியின் கேப்டனாக  தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சர் கே ஏ செங்கோட்டையன்  நியமிக்கப்பட்டு உள்ளார்.

சென்னையில் வரும் 24ந்தேதி  ஸ்ரீ ராமச்சந்திர உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (SRIHER) நடைபெறவுள்ள நட்பு கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் இந்தியா அணிக்கு தமிழக பள்ளி கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்க உள்ளார். .

ஆஸ்ட்ரேட் (ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணையம் -Austrade (Australian Trade and Investment Commission) மத்திய விளையாட்டு அறிவியல் மையத்துடன் (சிஎஸ்எஸ்) இணைந்து வருகை தரும் ஆஸ்திரேலிய தூதுக்குழு மற்றும் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விருந்தினர்களுக்கு இடையே நட்பு கிரிக்கெட் போட்டியை ஏற்பாடு செய்து வருகிறது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் பிளாக்டவுன் நகர மேயர் ஸ்டீபன் பாலி தலைமையிலான அணி பங்குகொள்கிறது. இதில்,  ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸின் முன்னாள் பிரதமர் நாதன் ரீஸ் மற்றும் பலர் பங்கேற்றுள்ளனர்.

15 பேர் கொண்ட இந்திய அணியில் திரைப்பட இயக்குனர் பரத் பாலா, எம்.ஆர்.எஃப் இயக்குனர் வருண் மம்மென், முருகப்பா குழுமத் தலைவர் அனந்தசேசன் நாராயணன், ஒலிம்பிக் பதக்கம் வென்ற ககன் நாரங் மற்றும் பலர் உள்ளனர்.

இந்திய அணிக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமை தாங்குகிறார்.