ம்மு காஷ்மீர் உரி பகுதியில் கடந்த 18–ந் தேதி பாகிஸ்தான்  பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் இருபது பேர்  உயிரிழந்தனர்.

உரி தாக்குதல்
உரி தாக்குதல்

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என்று இந்திய அரசு குற்றம்சாட்டியது. மேலும் இதற்கு தகுந்த பதிலடி தரப்படும் என்றும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று காஷ்மீர் மாநிலம் உரி பகுதிக்குள் ஊடுருவ முயற்சித்த பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவ வீரர்கள்,   துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே பாகிஸ்தானில் பலுசிஸ்தான் பகுதியில் தனி நாடு கேட்டு  நடக்கும் போராட்டத்தை ஆதரித்து இந்திய தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
பாக். வரைபடம்
பாக். வரைபடம்

இது போன்ற சூழ்நிலையால், தன் மீது இந்தியா தாக்குதல் நடத்துமோ என்ற அச்சம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டிருப்பதாய் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாகிஸ்தான் வடக்கு பகுதிகளுக்கான விமான சேவையை அந்நாட்டு அரசு தடை செய்துள்ளது.
பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் தான்யால் கிலானி டுவிட்டரில் வெளியிட்டு உள்ள தகவலில்,
சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவின் பெயரில் வடக்குப்பகுதிக்கு விமானங்கள் இயக்கப்படாது. சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்
பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்

அதே நேரம், “பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவதற்கான ஆயத்தங்களில் இந்தியா ஈடுபடவில்லை. ஏற்கெனவே வாஜ்பாய் ஆட்சி காலத்தில் ஒருமுறை அப்படி நடந்தது. படைகள், எல்லைப் பகுதிகளுக்கு நகர்த்தப்பட்டன. ஆனால் இப்போது அதுபோன்ற சூழல் இல்லை. அதே நேரம்,  பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகளை ஒழிக்கும் பணியில் இந்திய ராணுவம் தீவிரமாக ஈடுபடப்போகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்தே பாகிஸ்தான் தனது நாட்டின் வடக்கு பகுதிகளுக்கான விமான சேவைகளை நிறுத்தியிருக்கலாம். ஆனாலும் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை கூர்ந்து கவனிக்க வேண்டிடய விசயமே” என்று சர்வதேச ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.