கோவா:
கோவாவில் பாஜக தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த, எம்எல்ஏவான பிரசாத் கவோன்கர் பாஜகவுக்கு தான் தெரிவித்திருந்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளார்.

ஐஐடிக்கு நில ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, அவருக்கு முதலமைச்சர் பிரவோந்த் சாவந்திர்க்கும் இடையே நடந்த வாக்கு வாதத்திற்கு பின்னர் இந்த அறிவிப்பை பிரசாத் வெளியிட்டுள்ளார்.

முதல்வர் தெரிவித்த தொகுதியில் ஒரு இடத்தை வழங்கிய போதிலும், மற்றொரு தொகுதியில் ஐஐடி கட்டுவதற்கான இடத்தை பிரசாத் பரிந்துரைத்தபோது இந்த வாக்குவாதம் துவங்கியது.

இந்த வாக்குவாதம் துவங்கியதிலிருந்து எம்எல்ஏவான பிரசாத் கவோன்கர் முதலமைச்சர் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளதாவது: பிரசாத் கவோன்கர் நில ஒப்பந்தங்களில் பிஸியாக இருக்கிறார், முதலில் அவருடைய ஈடுபாடு குறிப்பிட்ட நிலத்தில் இருந்ததால் அந்த நிலத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்க மறுத்துவிட்டார், இப்போது அதை தருகிறேன் அதில் தான் ஐஐடி வளாகத்தை நிர்மாணிக்க வேண்டும் என்று பிடிவாதம் செய்தால் அது தவறான ஒரு விஷயம் என்று தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் செய்தியாளர் சந்திப்பின் பிறகு எம்எல்ஏ பிரசாத் மற்றொரு செய்தியாளர் சந்திப்பில், நான் நில ஒப்பந்தங்கள் செய்து இருக்கிறேனா, என்பதை கண்டுபிடிக்க முதல்வர் ஒரு விசாரணை குழுவை அமைக்கட்டும் அதில் நான் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் பின்பு பேசுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.