டெல்லி: முன்னாள் கர்நாடக சட்டமன்ற சபாநாயகரும், தற்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ரமேஷின் பாலியல் வன்கொடுமை பேச்சுக்கு, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையில், சட்டப்பேரவையில் விவாதத்தின்போது, முன்னாள் சபாநாயகரும், தற்போதைய காங்கிரஸ் எம்எல்ஏவுமான ரமேஷ். பலாத்காரத்தை தடுக்க முடியவில்லை என்றால், அதை  அமைதியாகப் படுத்து அனுபவிக்க வேண்டும்  என அருவருக்கும் வகையில் பேசியது சர்ச்சையாகி உள்ளது.

இதற்கு அவரது கட்சியைச் சேர்ந்த பெண் எம்எல்ஏக்கள் உள்பட பலர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையல், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், இப்படியான வார்த்தைகளை ஒருவரால் எப்படிப் பேச முடிந்தது என்பதே விவரிக்க இயலாதது என்று கோபத்துடன் தெரிவித்துள்ளதுடன் இதுபோன்ற பேச்சுக்கு அவரை யாரும் பாதுகாக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமை ஒரு கொடுங்குற்றம் எனவும் தனது கருத்தை ஆணித்தரமாக பதிவிட்டுள்ளார்.

பலாத்காரத்தை என்ஜாய் பண்ணுங்க! சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ அருவருப்பான பேச்சு…