தருமபுரி:

ர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க  மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள தடை இன்று 3வது நாளாக தொடர்ந்து வருகிறது.

தற்போது, காவிரியில் நீர்வரத்து வினாடிக்கு 7500 கனஅடியாக வந்துகொண்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் பகுதியில் பரிசல் இயக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம்  உத்தர விட்டுள்ளது.

கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது.   இதனால், கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அந்த அணைகளின் பாதுகாப்புக் கருதி, உபரி நீர் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர், தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வந்து மேட்டூர் அணைக்கு சென்றுகொண்டிருக்கிறது.

தற்போது  காவிரியில் நொடிக்கு 7500 கன அடி அளவு  தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால்,  பாதுகாப்புக் கருதி கடந்த செவ்வாய்க்கிழமை முதல், ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.  இந்தத்தடை இன்று 3வது நாளாக தொடர்ந்து வருகிறது.