வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: டிடிவியின் பரிசுப்பெட்டகத்தை கைப்பற்றிய சுயேச்சை…

Must read

வேலூர்:

வேலூர் மக்களவை தொகுதித் தேர்தல் வாக்குப்பதிவு ஆகஸ்டு 5ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது.

இந்த நிலையில், வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கப்பட்டதில், அங்கு சுயேச்சை வேட்பாள ராக போட்டியிடும் சுகுமார் என்பவருக்கு அமமுகவின் பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிலையில், பணப்பட்டுவாடா காரணமாக வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது, அடுத்த மாதம் 5-ந் தேதி (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

. அதைத் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் கடந்த 11-ந் தேதி தொடங்கியது. கடந்த 18-ந் தேதி வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தம் 50 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில்,  வேட்புமனு பரிசீலனைக்கு பிறகு, அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்பட 31 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.

கூடுதல் மனுக்கள், மாற்று வேட்பாளர் மனுக்கள், குறைபாடு கண்டறியப்பட்ட மனுக்கள் என 19 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்புமனுக்கள் திரும்ப பெற கடைசி நாளன்று, சுயேச்சை வேட்பாளர்களான ஜே.அசேன், ஏ.ஜி.சண்முகம், தனலட்சுமி ஆகிய 3 பேர் தங்களது மனுக்களை ‘வாபஸ்’ பெற்றுக்கொண்டனர்.

அதைத் தொடர்ந்து 28 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் மாலையில் வெளியிடப்பட்டது. அதன்படி

1. ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி)- அ.தி.மு.க.

2. கதிர் ஆனந்த் – தி.மு.க. (துரைமுருகன் மகன்)

3. தீபலட்சுமி- நாம் தமிழர் கட்சி.

4. ஜி.எஸ்.கணேசன்யாதவ்- பிரகதிஷில் சமாஜ்வாடி (லோகியா).

5. வி.சேகர்- ஆல்பென்ஷினர்ஸ் பார்ட்டி.

6. ச.திவ்யா- தேசிய மக்கள் கழகம்.

7. நரேஷ்குமார்- தமிழ்நாடு இளைஞர் கட்சி.

8. பேராயர் காட்பிரே நோபுள்- தேசிய மக்கள் சக்தி கட்சி.

9. மோகனம்-மறுமலர்ச்சி ஜனதா கட்சி.

10. விஜய் பவுல்ராஜா- ரிபப்ளிக்கன் சேனா.

இவர்கள் உள்பட  18 சுயேச்சைகள் உள்பட மொத்தம் 28 பேர் களத்தில் உள்ளனர்.

இவர்களுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கி வருகிறது. இதில் ,சுயேச்சை வேட்பாள ராக போட்டியிடும் சுகுமார் என்பவருக்கு அமமுகவின் பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதித்தேர்தலில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்  (அமமுக) போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் போட்டியிடவில்லை.

More articles

Latest article