மேட்டூர்:
ர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக மழை பொழிந்து வருவதால் ஒகனேக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
metur dam
நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக உபரி நீர் பாதுகாப்பு கருதி காவிரியில் திறந்து விடப்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக   5 ஆயிரம்   கனஅடியாக   வந்துகொண்டிருந்த   காவிர் நீர்    இரண்டு   தினமாக 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதன் காரணமாக மேட்டுர் அணையின் நீர்மட்டம் 49.23 அடியாக உயர்ந்துள்ளது.
ஆடி மாத பிறப்பை முன்னிட்டு மேட்டூர் அணை மற்றும் காவிரி ஆறு செல்லும் பகுதிகளில் புதுமண தம்பதிகள் காவிரியில் புனித நீராடினர்