மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு

Must read

மேட்டூர்:
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 15,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் பெய்த மழையால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதையடுத்து அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் வினாடிக்கு 10 ஆயிரத்து 136 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கடந்த 24-ந் தேதி ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாகவும், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7 ஆயிரத்து 492 கன அடியாகவும் அதிகரித்தது.

இந்நிலையில், டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 15,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், மேட்டூர் அணையில் 10,000 கனஅடியில் இருந்து 15,000 கனஅடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனப் பகுதிகளில் பாசன தேவை அதிகரித்துள்ளதால் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article