சேலம்:
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து வெளியான செய்தியில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 10,410 கனஅடியில் இருந்து 17,923 கனஅடியாக அதிகரித்து உள்ளது என்றும், 114.75 அடியாக இருந்த அணை நீர்மட்டம் 115.30 அடியாக உயர்வு; அணையில் நீர் இருப்பு 86.17 டி.எம்.சி.யாக உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.