சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 6000 கனஅடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. அதுபோல  புழல் ஏரியில் நீர் திறப்பு 2000 கன அடியாக திறக்கப்பட்டு உள்ளது.

மழைநீர் தேங்கியதை அகற்றும் பணிகளை அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா ஆய்வு செய்தனர். அப்போது சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என்று கூறியதுடன்,  செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பதால் சென்னைக்கு  எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன். சென்னையில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு இல்லை என  தெரிவித்தனர்.

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது கன மழை பெய்து வருகிறது. அதேபோல், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. டிசம்பர் 2, 3 தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, வீராணம், தேர்வாய், கண்டிகை ஆகியவற்றில் நீரின்மேட்டம் உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பால் உபரி நீர் திறப்பு அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு 6000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 3,098 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22.53 அடியாக உயர்ந்துள்ளது. அதுபோல புழல் ஏரியில் இருந்தும் திறக்கப்படும் நீர் அளவு 2000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால், ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் சுமார் 4000 கோடி ரூபாயில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக திமுக அரசும், மாநகராட்சியும் கூறி வந்த நிலையில், நேற்று பெய்த தொடர் மழையால் பல பகுதிகளில்  மழைநீர் தேங்கியது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது, மாநகரின் பெரும்பாலான  தேங்கி நிற்கும் மழைநீரரால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.  குரோம்பேட்டை, தி.நகர், வண்டலூர், வியாசார்பாடி, கொளத்தூர், செந்தில்நகர், ஜிகேஎம் காலனி போனற் பாகுதிகளில் சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

சென்னை கொரட்டூர் வடக்கு நிழற்சாலை சிஎஸ்ஐ சர்ச் மழைநீரில் தத்தளித்தது. மழைநீர் வெளியேற வழி இல்லாமல் தேங்கி நின்றதால், குடியிருப்பு பகுதி மக்கள் வேதனை அடைந்தனர்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் மற்றும் இந்து முன்னணி அலுவலகம் எதிரில், முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த பகுதியில் மக்கள் வெளியில் வரமால் அவதிப்பட்டனர். மேலும், நகரின் பல தாழ்வன பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால், இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் பழுதாகி நின்றன.

அம்பத்தூர், ஆவடி ரயில் நிலையங்களுக்கு இடையே மழைநீர் தேங்கி காணப்பட்டது. இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பை செல்லும் விரைவு ரயில், மங்களூர் சென்ட்ரல் மெயில், ஆலப்புழா அதிவிரைவு ரயில், நீலகிரி அதிவிரைவு ரயில், காவேரி விரைவு ரயில், பாலக்காடு அதிவிரைவு ரயில் உள்ளிட்ட விரைவு ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தாமதமாக இயக்கப்பட்டது.

இந்த பகுதிகளில், பொதுமக்களின் புகார்களை தொடர்ந்து,  மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  நேற்று (29ந்தேதி)  காலை முதல் இன்று வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் 10 செ.மீ. முதல் 25 செ.மீ. அளவுக்கு கனத்த மழை பெய்துள்ளது. ஆனாலும் பாதிப்பு என்பது மிகப்பெரிய அளவில் இல்லை. பெரிய மழை பெய்தது என்ற சுவடே தெரியாத அளவுக்கு மழைநீர் வடியும் வகையில் மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் வசதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 800-க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தூரத்துக்கான புதிய மழை நீர் வடிகால் கால்வாய்களை அமைத்ததால் மழை பெய்தாலும் முக்கிய சாலைகளில் சில மணிநேரத்தில் வடிந்து விடுகிறது. பெரிய அளவில் மழைநீர் பாதிப்பு இல்லை.   ஏற்கனவே இருந்த கால்வாய்களை தூர்வாரிய காரணத்தால் தண்ணீர் விரைவாக வடிந்து விடுகிறது.

சைதாப்பேட்டையை பொறுத்தவரை 5 செ.மீ. மழை பெய்தால்கூட திருவள்ளூர் தெரு, திவான் பாஷ்யம் தோட்டம், சுப்பிரமணிய சாலை போன்ற பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் நாள் கணக்கில் தேங்கி நிற்கும். ஆனால் இப்போது அப்படி இல்லை. ஒரு இடத்தில் கூட தண்ணீர் தேங்குவது கிடையாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்கூட்டியே மேலாண்மை செய்த காரணத்தால் மிகப்பெரிய பாதிப்பு இல்லாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. பெரிய மழை வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் தயாராக உள்ளது. 162 இடங்களில் நிவாரண மையங்களும் தயாராக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில்,  வடசென்னை யானைக்கவுனி பகுதியில் மழை பாதிப்புகளைஅமைச்சர் சேகர்பாபு  சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஆய்வு மேற்கொண்டார்.  சென்னையில், 2,700 கி.மீ. அளவுக்கு புதிய மற்றும் பழைய மழைநீர் வடிகால்கள் அகலப்படுத்தப்பட்டுள்ளன  என்றவர்,  சென்னையில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்களும் தூர்வாரப்பட்டுள்ளன. * மழைநீர் வடிந்து செல்லும் அளவிற்கு கால்வாய்கள் சீரமைக்கப்பட்டுள்ளன என்றார்.

மேலும், திமுக  அரசின் நடவடிக்கையால் வால்டாக்ஸ் சாலையில் தண்ணீர் நிற்கவில்லை.  தொடர் மழையால் ஒரு சில தாழ்வான இடங்களில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்படுகிறது. அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியில் ஈடுபட்டுள்ளன.  மழைநீரை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சியில் 21 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

சென்னையில் மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், அதுதொடர்பாக சமுக வலைதளங்களில் வெளியானி வீடியோக்கள்…