சென்னை:
மிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. இன்று புதிதாக 786 பேருக்கு பாதிப்பு உறுதியானவர்களில்  569 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதனால்  சென்னையில்  கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 9364 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணம்,  சோதனைகள் அதிகம் நடத்தப்படுவதுதான் காரணம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சல்ஜாப்பு தெரிவித்து வருகிறார். ஆனால், அரசின் திறமையின்மை காரணமாகவே கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மக்கள் நெருக்கம் மிகுந்த சென்னையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுப்பதில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
கொரோனா பரவல் தொற்று தொடங்கியது முதலே, சென்னையில் சரியான தடப்பு நடவடிக்கை எடுக்காத காரணத்தால், தற்போது தொற்று பரவல் எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்கிறது.
எடப்பாடி  அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாகவே கொரோனா தொற்று  வேகமாக பரவி வருவதாகவும்,  சென்னை மாநகராட்சி தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை கவனத்தில்கொண்டே, சரியான முறையில் ஊரடங்கை அமல்படுத்தாமல், தவற விட்டதன் விளைவு இன்று சென்னை கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது…
கொரோனா பரவல் தொற்றின் வீரியத்தை பரவலை தடுக்க சரியான நடவடிக்கை எடுக்க முடியாமல் மாநில அரசு திணறி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த சூழலில், சென்னையில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 9364 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இதுவரை  67 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 3,773  பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளதாகவும், 5,523 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 3,85,185 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும், இன்று மட்டும் 12,653  பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது சோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில் 12,046 பேரின் முடிவுகள் வந்துவிட்டதாகவும், 503 பேரின் முடிவுகள் ஆய்வில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருபவர்கள் 12 வயதுக்கு கீழே உள்ளவர்கள் அதிகம் என்றும்,  இதுவரை 902 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோவை, தர்மபுரி, நமக்கல் மற்றும் திருப்பூரில் புதிதாக கொரோனா வழக்குகள் ஏதும் பதிவாகவில்லை.
மாவட்டம் வாரியாக பாதிப்பு விவரம்..