ஸ்டாலினின் மகளுக்கு சொந்தமான இடத்தில் நடந்த வருமானவரியில் அதிகாரிகள் எதையும் கைப்பற்றவில்லை

Must read

சென்னை:
திமுக தலைவர் ஸ்டாலினின் மகளுக்கு சொந்தமான இடத்தில் நடந்த வருமானவரி சோதனை நிறைவடைந்த நிலையில், அவரது இல்லத்தில் இருந்து அதிகாரிகள் எதையும் கைப்பற்றவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில், அரசியல் கட்சியினர் மக்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையத்தினர் பறக்கும்படைகள் அமைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல வருமான வரித்துறையினரும் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை. செந்தாமரை, கணவர் சபரீசனோடு சென்னை நீலாங்கரை இல்லத்தில் வசித்து வருகின்றனர். இன்று அவரது வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை ஈடுபட்டுனர்.

வருமானவரி சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article