ஊட்டி:

றைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருதாக  சில ஊடகங்களில் வெளியான செய்தி தவறு என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறைந்த ஜெயலலிதாவுக்குச் கொடநாடு பங்களாவில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடந்த கொலை, கொள்ளை குறித்து 4 மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் டிரைவர் கனகராஜ் விபத்தில் மரணமடைந்து விட்டார். அதேபோல பாலக்காடு அருகில் விபத்தில் சிக்கிய சயனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த கொலை மற்றும் கொள்ளச் சம்பவம் தொடர்பாக 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பலரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று கொடநாடு பங்களாவிற்கு மூன்று வாகனங்களில் வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.

ஆனால் குற்ற வழக்கு தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும் வருமானவரித்துறை சார்பில் சோதனை ஏதும் நடைபெறவில்லை என்றும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.