எம்எல்ஏ ஹாஸ்டல் ரெய்டு எதிரொலி: அமைச்சர் உதயகுமாருக்கு வருமான வரித்துறை சம்மன்!

சென்னை:

எம்எல்ஏ ஹாஸ்டல் ரெய்டை தொடர்ந்து அமைச்சர் உதயகுமாருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்க ஏராளமான  பணம் பதுக்கி வைக்கப்பட்டிப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதியில் உள்ள வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் பலரது அறைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

குறிப்பாக அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரின் அறையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அந்த அறையில் நேற்று இரவு இரண்டு மணி நேரம் நடந்தது. இந்த சோதனையில் அமைச்சர் உதயக்குமாரின் அறையில் இருந்து பணம் ஏதுவும் கைப்பற்றப்படவில்லை. அதேநேரம் அவரது பைகளில் இருந்த சில துண்டுச்சீட்டுகளைகைப்பற்றியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அதுகுறித்து விசாரிக்க தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை விசாரணைக்கு ஆஜராகும்படி வருமானவரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Income tax department, MLAs' Hostel., R.B.Udayakumar
-=-