சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை…

Must read

சென்னை; சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான வீடு, அலவலகம் உள்பட 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

மதுரையை சேர்ந்த அன்புச் செழியன் கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் படங்களை வெளியிட்டு வருகிறார். திமுக, அதிமுக என என தமிழக அரசியல் கட்சிகளின் ஆதரவை பெற்றவர். திரையுலகை ஆட்டிபடைத்து வரும், சினிமா பைனான்சியர் அன்புச் செழியனுக்கு சொந்தமான வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை நுங்கம்பாக்கம் காம்தார்நகர் முதல் தெருவில் உள்ள அன்புச் செழியனின் வீட்டில் சோதனை நடக்கிறது. சென்னையில் 10 இடங்களிலும் மதுரையில் 30 இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

ஏற்கனவே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இதுபோல சோதனை நடத்தப்பட்ட நிலையில், சரியாக 2 வருடங்களுக்கு பிறகு இன்று அதிகாலையில் அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

More articles

Latest article