திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, எஸ்.ஆர்.பிரபு அலுவலங்களில் வருமானவரித்துறையினர் சோதனை

Must read

சென்னை: பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, எஸ்.ஆர்.பிரபு  அலுவலகம் மற்றும் வீடுகளில்  வருமானவரித்துறை யினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இன்று காலை முதல் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில்,   தற்போது பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு மற்றும் எஸ்.ஆர்.பிரபு அலுவலகம் மற்றும் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 சென்னை தி.நகரில் உள்ள கலைப்புலி எஸ் தாணு அலுவலகம் மற்றம் அவரது  வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதுபோல,  நடிகர் சூர்யாவின் உறவினரான எஸ்.ஆர். பிரபு வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. எஸ்.ஆர்.பிரபு, கைதி, என்ஜிகே உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

திரையுலகை சேர்ந்தவர்களின் வீடுகளில் அடுத்தடுத்து வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருவது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை…

More articles

Latest article