சென்னை,

ருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரான விஜயபாஸ்கர் மனைவியிடம் வருமான வரித்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் 7ந்தேதி தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை நடைபெற்றது. அப்போது அவரது வீட்டில் இருந்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அதைத்தொடர்ந்து, விஜயபாஸ்கர் மனைவியை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

இந்நிலையில்,  வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று காலை நேரில் ஆஜரானார் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா.

அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது,  பல்வேறு கணக்கு வழக்குகளை, விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா  கவனித்து வந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்தே அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகவும், அதன்படி இன்று காலை வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார் ரம்யா.

அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இன்றைய விசாரணையின்போது,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது கைப்பற்றப்பட்ட பணம், அதைத்தொடர்ந்து அவரது வீட்டில் நடைபெற்ற ரெய்டின்போது கைப்பற்றப்பட்ட பணம், ஆவணம் தொடர்பாக  விசாரணை செய்து வருகின்றனர்.