ரூ.20 லட்சம் ரொக்கம்: அதிமுக எம்.பி. ஏழுமலையிடம் வருமான வரித்துறையினர் விசாரணை

சென்னை:

ரூ.20 லட்சம் ரொக்கம் கொண்டு வந்த  ஆரணி அதிமுக எம்.பி. செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்.

டில்லியில் இருந்து சென்னை திரும்பிய ஆரணி தொகுதி அ.தி.மு.க., எம்.பி. செஞ்சி ஏழுமலை விமான நிலையத்தில்சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரிடம் ரூ.20 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தினார். விசாரணையில், அவர் தனது மகளின் படிப்பு செலவுக்குகாக வங்கியில் இருந்த தனது சேமிப்பு பணத்தை  எடுத்து வந்ததற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தார். அதையடுத்து, அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம்  ரூ. 20 லட்சத்தை வருமான வரித்தறை அதிகாரிகள் திருப்பி கொடுத்தனர், இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: admk mp elumalai, Income tax department
-=-