டில்லி:

லகின் மாபெரும் ஜனநாயகத் திருவிழா என அழைக்கப்படும் இந்திய 17வது  மக்களவைக்கான தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது அதைத்தொடர்ந்து 23ந்தேதிவாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நாட்டின் பிரதான தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் மட்டு மின்றி மாநில கட்சிகளும் தேர்தல் முடிவை ஆவலோடு எதிர்பார்த்து வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றன. ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்று மக்களிடையே பட்டிமன்றம் நடைபெற்று வருகிறது.

தற்போது நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடை பெறுவதால், வாக்கு எண்ணிக்கை  தொடங்கிய சில மணி நேரங்களிலேயே முடிவு தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த முறை, வாக்குப்பதிவு இயந்திரத்தில்  பதிவான வாக்குகளுடன் விவிபாட்டில் பதிந்துள்ள வாக்குகளையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டியதிருப்பதால் வாக்கு எண்ணிக்கையின் முடிவு வெளிவர தாமதாகம் வாய்ப்பு உருவாக்கி உள்ளது.

எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரத்தில்  முறைகேடு நடப்பதாக எதிர்க்கட்சிகள் ஏராளமான புகார்கள் தெரிவித்திருந்த நிலையிலும், உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு காரணமாகவும் விவிபாட் இயந்திரங்களின் வாக்குப்பதிவையும் எண்ண வேண்டியதிருப்பதால், வாக்குகள் எண்ணிக்கை முடிவு அறிவிப்பதில்  காலதாமதம் ஆகும் சூழல் உருவாகி உள்ளது.

இதன் காரணமாக தேர்தல்முடிவுகள்  23ம் தேதி பிற்பகல் அல்லது  24ம் தேதிதான் அறிவிக்கப்பட லாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்காக முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கியது. அன்று 91 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தலும், ஏப்ரல் 18-ந் தேதி 96 தொகுதிகளில் 2-வது கட்ட தேர்தலும், ஏப்ரல் 23-ந் தேதி 115 தொகுதிகளில் மூன்றாவது கட்ட தேர்தலும், ஏப்ரல் 29-ந் தேதி 71 தொகுதிகளில் 4-வது கட்ட தேர்தலும் நடைபெற்றது. கடந்த 6-ந் தேதி 51 தொகுதிகளில் 5-வது கட்ட தேர்தலும், கடந்த 12-ந் தேதி 59 தொகுதிகளில் 6-வது கட்டத் தேர்தலும் நடைபெற்றது.

6 கட்ட தேர்தல் நிறைவு பெற்றுள்ள நிலையில், 7-வது கட்ட தேர்தல், பீகார், ஜார்க்கண்ட் , மத்திய பிரதேசம் , பஞ்சாப் , மேற்கு வங்காளம் , சத்தீஸ்கர் , உத்தரபிரதேசம் , இமாச்சலபிரதேசம் ஆகிய 8 மாநிலங்களில் இருக்கும் 59 தொகுதிகளில் நாளை நடைபெறுகிறது.

இதையடுத்து தேசிய கட்சிகள் மட்டுமின்றி மாநில கட்சிகளும் தேர்தல் முடிவை ஆவலோடு எதிர்பார்த்து வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றன. ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்று மக்களிடையே பட்டிமன்றம் நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில்  இந்தியாவில் 90 கோடி வாக்காளர்கள்  வாக்களிக்கத் தகுதியானவர்கள் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதுபோல 8.4 கோடி புதிய வாக்காளர்களும் தங்களது வாக்குகளை முதன்முறையாக செலுத்துவதாகவும் கூறப்பட்டது. 18 முதல் 19 வயதுக்குள் 1.5 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

மேலும்,  அனைத்து வாக்குச்சாவடிகளிலும் யாருக்கு வாக்களித்தோம் எனத் தெரிந்து கொள்ளும் வகையில் முதன்முறையாக விவிபாட் இயந்திரமும் பொருத்தப்பட்டது.

மேலும், வாக்குச்சாவடிகளும், கடந்த தேர்தலைவிட சுமார் 1 லட்சம் வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டது. கடந்த தேர்தலின்போது 9 லட்சமாக இருந்த வாக்குச்சாவடிகள் இந்தாண்டு 10 லட்சமாக உயர்ந்த்தப்பட்டுள்ளது.

இவ்வளவு வசதிகள் செய்யப்பட்டும் இந்த முறை தேர்தல் முடிவு தாமதமாகலாம் என்பதை  தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவும் கூறி உள்ளார்.

இதன் காரணமாக தேர்தல் முடிவுகள் 23ந்தேதி பகலில் வெளியாக சாத்தியமில்லை என்றே நம்பப்படுகிறது. ஒருவேளை அன்று இரவு வெளியாகலாம்  அல்லது 24ந்தேதி காலை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், தமிழகத்தில் இடைத்தேர்தல் முடிவுகள் 23ந்தேதி அன்று மதியம் முதலே வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.