அமெரிக்காவில் ஒக்லகாமாவைச் சேர்ந்த 43 வயதான தாயும் தாயும் 23 வயதான மகளும் திருமணம் செய்து கொண்டனர். இந்த முறைகேடான திருமணத்தினால் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் ஒக்லகாமா நகரைச் சேர்ந்த பேட்ரிகா ஸ்பேன். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். ஆனால் சிறுவயதிலேயே குழந்தைகளைப் பிரிந்து தனித்து வாழ்ந்து வருகிறார். அவருடைய மூன்று குழந்தைகளும் பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தனர்.
இரு ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்பேன் தனது மகள் மிஸ்ட்டியுடன் மீண்டும் இணைந்து வாழத் தொடங்கினார்.
இந்நிலையில் அரசு அதிகாரிகள் தற்செயலாக வீட்டிலுள்ளோரை கணக்கெடுக்க வந்தனர். அப்போது அவர்களை பற்றிய தகவல்களை கோரினர்.
பெண்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் சொன்னதை அடுத்து சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் தாய் மகள் இருவரும் திருமணம் செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இருவருக்கும் பத்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம்.