டில்லி

காங்கிரஸ் தலைவராக உடனடியாக ராகுல் காந்தியை நியமிக்க டில்லி காங்கிரஸ் தீர்மானம் இயற்றி உள்ளது.

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்குப் பொறுப்பு ஏற்று அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.  இந்த ராஜினாமாவை மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஏற்காமல் மறு பரிசீலனை  செய்யக் கோரிக்கை விடுத்தனர்.

 ஆயினும் ராகுல் காந்தி தனது ராஜினாமாவைத் திரும்பப் பெற மறுத்து விட்டார். அதன் பிறகு இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றுக் கொண்டார்.  ராகுல் காந்தியை மீண்டும் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு பலரும் கோரிக்கை விடுத்தும் அவர் செவி சாய்க்கவில்லை.

காங்கிரஸுக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்ய டில்லி காங்கிரஸ் கட்சி இன்று கூட்டம் நடத்தியது.  அந்த கூட்டத்தில் உடனடியாக ராகுல் காந்தியைக் காங்கிரஸ் நியமிக்கும் தீர்மானம் ஏகமானதாக நிறைவேறி உள்ளது.