ண்டன்

லகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துடன் விளையாடும் போது இந்தியா தனது சீருடையை ஆரஞ்சு கலருக்கு மாற்ற உள்ளதாக கூறப்படுகிறது.

ஐசிசி என அழைக்கப்படும் சரவதேச கிரிக்கெட் கவுன்சில் உலகக் கோப்பையில் போட்டியிடும் அணிகளுக்கான சீருடை குறித்து விதிமுறைகள அறிவித்துள்ளது.    அந்த விதிகளின்படி ஒரே நிற சீருடை கொண்ட அணிகள் ஒரு சில போட்டிகளுக்கு நிறத்தை மாற்றிக் கொள்ள வேண்டி உள்ளது.

அதே நேரத்தில் இந்த போட்டியை நடத்தும் அணி தனது சீருடை நிறத்தை மாற்ற வேண்டிய தேவை இல்லை.  அது மட்டுமின்றி தங்களுக்கு மட்டும் என தனி நிறத்தை பயன்படுத்தும் அணிகளும் சீருடை நிறத்தை மாற்ற தேவை இல்லை.   அதனால் ஒரே நிறத்தை பயன்படுத்தும் போட்டியை நடத்தாத அணிகள் ஓரிரு போட்டிகளுக்கு சீருடை நிறத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

தற்போது இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் வேறு வேறு விதமான நீல நிறத்தை பயன்படுத்தி வருகின்றன.  வஙக் தேசம், தென் ஆப்ரிக்கா,பாகிஸ்தான் ஆகியவை விதம் விதமான பச்சை நிறத்தை பயன்படுத்துகின்றன.    இதனால்  இந்தியா ஓரிரு போட்டிகளில் சீருடை நிறத்தை மாற்ற வேண்டிய நிலையில் உள்ளது.

கடந்த வாரம் இந்திய அணியினருக்கு புதிய சீருடையான ஆரஞ்சு நிற சீருடை வழங்கப்பட்டுள்ளது.   இந்த புதிய ஆரஞ்ச் நிறத்தில் சட்டைக் காலரில் நீல கோடுகளைக் கொண்ட சீருடைகளை இந்திய அணி  ஆப்கானிஸ்தானுடன் நடக்கும் போட்டியில் அணிய உள்ளதாக கூறப்பட்டது.

தற்போது வரும் 30 ஆம் தேதி அன்று இங்கிலாந்துடன் நடக்கும் போட்டியில் இந்திய அணி சீருடையை மாற்றும் என சொல்லப்பட்டுள்ளது.   இதற்கிடையில் இந்த சீருடைகள் காவி நிறத்தை குறிப்பதால் இது அரசியல் மயமாக்கத்தின் அறிகுறி என பலர் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.