அமெரிக்காவில் மேலும் 32 லட்சம் பேர் பணி இழப்பு

Must read

வாஷிங்டன்

மெரிக்காவில் சென்ற வாரம் மேலும் 32 லட்சம் பேர் முதல் முறையாக பணியற்றோர் நிவாரண நிதிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

அமெரிக்காவில் வெகு வேகமாகப் பரவி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பல பணியகங்கள் மூடப்பட்டுள்ளன.   இதனால் பலரும் பணி இழந்து வருகின்றனர்.   அமெரிக்காவில் பணி இழந்தோருக்கு நிவாரண நிதி வழங்கப்படுகிறது.   இதனால் அதிக பட்சமாகப் பணி இழந்தோர் நிவாரண நிதிக்காகச் சென்ற மாதம் மட்டும் 2.02 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதற்கு முன்பு 2009 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 8.35 லட்சம் பேர் நிவாரண நிதி கோரி விண்ணப்பித்திருந்தனர்.  தற்போது இதுவே அதிக எண்ணிக்கையாகும்.  ஆனால் பணி இழந்தோர் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.    சென்ற வாரம் பணியற்றோர் நிவாரண நிதிக்கு 39 லட்சம் பேர் விணப்பித்துள்ளனர.  இதில் 32 லட்சம் பேர் முதல் முறையாக விண்ணப்பிக்கின்றனர்.

இந்த தகவல்களின் படி மார்ச் மாதம் 4.4% அதிகரித்த வேலையின்மை ஏப்ரல் மாதத்தில் மேலும் 14% அதிகரித்துள்ளது.  இந்த அதிகரிப்பு மே மற்றும் ஜூன் மாதங்களிலும் தொடரும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.    ஆனால் மூத்த பொருளாதார நிபுணரான எலைஸ் கோல்ட் என்பவர் உண்மையில் பணி இழந்தோர் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என தெரிவிக்கிறார்.

அவர், “நான் வேலை இழப்பில் இன்னும் உச்சத்தை அடையவில்லையெனச் சொல்லலாம்,.  மே, ஜூன் மாதங்களில் மேலும் அதிக அளவில் பணி இழப்பு ஏற்படக்கூடும்.   துரதிருஷ்டவசமாக இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.  அப்போது நிலைமை இன்னும் மோசமாக அமையும்.  சென்ற மாதம் 2.02 கோடி பேர் பணி இழந்தது போல் மேலும் பலர் பணி இழக்கக் கூடும்” என தெரிவித்துள்ளார்.

More articles

Latest article