காஞ்சிபுரம்:

க்தர்களுக்கு தற்போது சயன கோலத்தில் அருள்பாலித்து வரும் அத்திவரதர், 24ந்தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பார் என தகவல்கள் வெளியான நிலையில், ஆகஸ்டு 1ந்தேதி முதல்தான், நின்ற கோலத்தில் தரிசனம் தருவார் என காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

40ஆண்டுகளுக்கு ஒருமுறை 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அத்திவரதர் 24 நாட்கள் சயன கோலத்திலும், 24 நாட்கள் நின்ற கோலத்திலும் பக்தர்கள் தரிசனம் வழங்கி வருகிறார்.

கடந்த 1ந்தேதி முதல் சயன கோலத்தில் காட்சி தரும் அத்தி வரதர் 24ந்தேதி முதல் நின்ற கோலத்தில் அருள்பாலிப்பார் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது மாற்றப்பட்டு ஆகஸ்டு 1ந்தேதி முதல் 17ந்தேதி வரை மட்டுமே நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தருவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதையடுத்து, 18ந்தேதி மீண்டும் ஜலசயனம் செய்யப்படுவார் என்றும் அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய நிலையில்,   அத்திவரதர் தரிசனத்துக்கு, ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் எண்ணிக்கை 2 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தரிசனத்துக்கு 2 நாட்களுக்கு முன்பே, முன்பதிவு செய்து காலை 6:00 மணி முதல் 8:00 மணி வரையிலும், மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணிவரையிலும் தரிசனம் செய்யலாம் என்றும்  மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.