டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,38,018 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதே வேளையில்  310 உயிரிழந்துள்ளதுடன், தொற்றில் இருந்து 1,57,421 பேர் குணமடைந்து உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள் குறித்து மத்தியஅரசு தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் புதிதாக மேலும்  2,38,018 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,76,18,271 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பை விட நேற்று 20ஆயிரம் வழக்குகள் குறைந்துள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 1,57,421 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,53,94,882 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 94.09% ஆக குறைந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி  மேலும் 310 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் மொத்த கொரோனா உயிரிழப்பு  4,86,761 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.29% ஆக குறைந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 17,36,628 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  சிகிச்சை பெறுவோர் விகிதம் 4.62% ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில்  இதுவரை 1,58,04,41,770 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 79,91,230 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில்  இதுவரை 70,54,11,425* சோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. நேற்று மட்டும்  16,49,143 சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.