கொரோனா பாதிப்பில் உலக நாடுகளில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதில், பிரேசில் முதலிடத்தில் உள்ளது. அங்கு 56,411 பேருக்கு உறுதி செய்யப்பட் டுள்ளது. 2வது இடத்தில் உள்ள அமெரிக்காவில் 54,504 பேரும், இந்தியாவில் 52,479 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 857 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 19,08,255 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதுவரை தொற்று பாதிப்பில் இருந்து 12.82 லட்சம் பேர் குணம் பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலையில், 5.86 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதுபோல கடந்த 24 மணி நேரத்தில் 857 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 39795 ஆக அதிகரித்துள்ளது.