சென்னை: தமிழ்நாட்டில், ஒரே மேடையில் ராகுல், ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என்றும், பிரியங்காவும் பிரசாரம் செய்ய வருகிறார் என தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 10ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல், புதுச்சேரி (ஜூன் 15), மேற்கு வங்காளம் (மே 7), அசாம் (மே 20), கேரளா (மே 23) ஆகிய மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடைகிறது. எனவே, இந்த 5 மாநிலங்களில் உள்ள 824 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்து தேர்தல் தேதிகளை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் வன்முறை குறைவு என்பதால், எப்போதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வரும் 13ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் களம் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது தகதகவென தகித்துக் கொண்டி ருக்கிறது.
இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்துக்கு ராகுல்காந்தி மற்றும் தெலங்கானா, கர்நாடகா முதல்வர்கள் வரவுள்ளனர். தமிழகத்தில் ராகுல்காந்தியின் தேர்தல் பிரச்சாரம் குறித்து சில தினங்களில் அறிவிக்கப்படும் என்றவர், தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்ய பிரியங்கா காந்தியும வருகிறார் என்றவர், ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்வார்கள் என்றும் கூறினார்.
புதுச்சேரிக்கு ராகுல்காந்தி வந்த போது, தமிழக முதல்வருக்கு தமிழகத்தில் பொதுக்கூட்டம் இருந்தது. அதேநேரம் ராகுல்காந்தி அவசரமாக கேரள மாநில பிரச்சாரத்துக்கு செல்ல வேண்டியதும் இருந்தது. அதனால், புதுச்சேரியில் இருவரும் ஒன்றாக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை.
இவ்வாறு கூறினார்.
[youtube-feed feed=1]