கொழும்பு: கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் மற்ற நாடுகளில் உள்ள சீனர்களுக்கு உணவு வழங்கப்படுவது இல்லை என்ற புகார் எழுந்திருக்கிறது.

சீனாவின் உஹான் மாகாணத்திலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸால் சீனாவில் இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனால் சீனாவிலிருந்து தங்கள் நாட்டு மக்களை மற்ற நாடுகள் விமானங்களை அனுப்பி திருப்பி அழைத்து செல்கின்றன. இந்நிலையில் இலங்கையில் சீனாவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந் நிலையில், உலக நாடுகள் பலவற்றில் சீனர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  இலங்கை கொழும்புவில் உள்ள உணவகங்கள் சில வற்றில் சீனர்களுக்கு அனுமதியில்லை, உணவு தருவது என்று அறிவிப்புகள் ஒட்டப்பட்டுள்ளன.

இத்தகைய நடவடிக்கை பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாடுகளில் விடுதிகள் முதற்கொண்டு பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் சீனர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.