மும்பை
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே மாதத்தில் 15-18 வயதுடைய சிறார்கள் 60.7 லட்சம் பேரில் 54% பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது
சென்ற மாதம் 3 ஆம் தேதி முதல் 15-18 வயதான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. இவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்படுகிறது. கோவாக்சின் தடுப்பூசி இரு டோஸ்களுக்கு இடையே 28 நாட்கள் இடைவெளி இருந்தால் போதும் என்பதால் தற்போது சிறார்களுக்கு 2 ஆம் டோஸ் ஊசியும் போடப்படுகிறது/
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே மாதத்தில் 15-18 வயதுடைய சிறார்கள் 60.7 லட்சம் பேர்களில் 54% பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் பாந்த்ரா, கோலாப்பூர், சாங்லி போன்ற சிறிய மாவட்டங்களில் 70% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதே வேளையில் மும்பை. தானே நாசிக்,. பூனே போன்ற நகரங்களில் எண்ணிக்கை குறைவாக உள்ளது..
மும்பை நகரில் இதுவரை 46% சிறார்களுக்கு மட்டுமே முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பெரு நகரங்களில் எண்ணிக்கை குறைவால் விதிதாச்சார அடிப்படையில் பல மாவட்டங்கள் பின் தங்கி உள்ளன. மும்பையைப் போல் பல மாவட்டங்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள சிறார்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்த சதவிகிதத்தில் உள்ளது.
இதில் பாந்த்ரா போன்ற மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் இம்மாவட்ட மருத்துவ அதிகாரி ரியாஸ் அகமது மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் கதம் ஆகியோர் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று தடுப்பூசியின் அவசியத்தைப் பெரியவர்களிடம் எடுத்துச் சொல்லி அதன் மூலம் இந்த சாதனை நடந்துள்ளது.