சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 31 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை வலுத்து வருவதால் மழை அதிகரித்து வருகிறது.  தலைநகர் சென்னையில் காலை முதல் விடாமல் மழை பெய்து வருவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 31 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ,விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி, கடலூர் ,தஞ்சாவூர் ,திருவாரூர் ,நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை ,அரியலூர் ,பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல் ,சேலம், புதுக்கோட்டை, சிவகங்கை , நெல்லை, ராமநாதபுரம்,தூத்துக்குடி, விருதுநகர் ,தேனி ,திண்டுக்கல், கோவை , தென்காசி , திருப்பூர் , நீலகிரி , கன்னியாகுமரி , ஆகிய 31 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.