எங்கே போகிறது இந்தியா ? 16 வயது சிறுவனை பலாத்காரம் செய்த 15 சிறுவர்கள் !

Must read

மும்பை

ந்தேரி பகுதியில் வசிக்கும் ஒரு சிறுவனை 15 சிறுவர்கள் பலாத்காரம் செய்ததாக வந்துள்ள புகாரின் பேரில் இதுவரை 7 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  8 பேரை போலீஸ் தேடி வருகிறது.

மும்பையிலுள்ள அந்தேரி பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுவன் ஒருவர் அருகில் வசிக்கும் மற்றொரு சிறுவனால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.  பலாத்காரம் செய்த சிறுவன் அதை தன் மொபைல் மூலம் வீடியோவாக படம் எடுத்துள்ளார்.  பிறகு அந்த வீடியோவை தன் நண்பர்களிடமும் காட்டியுள்ளார்.  பலாத்காரம் செய்யப்பட்ட சிறுவன் பயத்தினால் இதை தன் வீட்டார் உட்பட யாரிடமும் தெரிவிக்கவில்லை.

இதனால் தைரியமடைந்த அந்த பலாத்காரம் செய்த சிறுவன், தனது நண்பர்களான மற்ற சிறுவர்களுடனும் இவரை பாலுறவு கொள்ள வைத்துள்ளார்.  இந்த வீடியோவை வெளியிடுவதாக பயமுறுத்தியும், அவரை அடித்து உதைத்தும் அவரை 15 பேர் இதுவரை பலாத்காரம் செய்துள்ளனர்.  இந்த சம்பவம் 4 முறை நடைபெற்றுள்ளது.  பக்கத்திலுள்ள ஆளில்லாத விளையாட்டு மைதானத்துக்கு அழைத்துச் சென்று அவரை ஒருவர் பின் ஒருவராக பாலியல் உறவுக்கு ஆட்படுத்தியுள்ளனர்.

இரண்டு வாரத்துக்கு முன்பும் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.  அந்த பரிதாபத்துக்குரிய சிறுவன் வலி தாள முடியாமல் தவிப்பதைக் கண்ட அவரின் 31 வயது நண்பர் ஒருவர் இது பற்றி விசாரிக்க அவர் நடந்ததைக் கூறியுள்ளார்.  அந்த நண்பர் பக்கத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் மேலாளராக பணி புரிபவர்.  அந்த மேலாளர் இதை போலிசின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

அந்த சிறுவன் கூப்பர் மருத்துவமனையில் சோதனைக்கு அனுப்பப்பட்டார். சோதனையில் அவரை பலாத்காரம் பலமுறை செய்யப்பட்டது கண்டறியப் பட்டது.  அவர் சோதனைக்குப் பின் வீட்டுக்கு அனுப்பப் பட்டு அந்த 15 பேர் மேல் புகார் பதியப்பட்டது.  இதில் கொடுமை என்னவென்றால் அந்த சிறுவர்கள் அனைவரும் 15 முதல் 17 வயது உள்ளவர்கள்.  அதில் 7 பேர் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மற்ற சிறுவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

பெண்களுக்கு பாதுகாப்பில்லை என முழங்கும் பலரும் தற்போதாவது ஆண்களுக்கும் பாதுகாப்பில்லை என்பதை ஒப்புக்கொள்வார்களா??

“இது நாடா இல்லை வெறும் காடா இதை கேட்க யாரும் இல்லை போடா”
– திரைப்பட பாடல் வரிகள்

More articles

Latest article