மதுரையில் 60% தரக்குறைவான பால் விற்பனை : அதிர்ச்சியூட்டும் ஆய்வு

Must read

துரை

துரை நகர் மற்றும் சுற்றுப்புறங்களில் விற்கப்படும் பாலில் 60% வரை தரக்குறைவான பால் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் கடந்த 2018 ஆம் வருடம் மே மற்றும் அக்டோபர் மாதங்களில் நாடெங்கும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பால் சோதனை செய்தது.  மொத்தம் இந்த சோதனையில் 6432 மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதில் தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் இருந்து 551 மாதிரிகள் எடுக்கப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இந்த சோதனையின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன.  இந்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளைச் சோதித்ததில் 51% வரை அகில இந்திய தரக்கட்டுப்பாட்டு நிர்ணய அளவுக்கு கீழாக உள்ளது.   குறிப்பாக மதுரையில் எடுக்கப்பட்ட 25 மாதிரிகளில் 10 மட்டுமே தர நிர்ணயத்துக்கு உட்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவர் சுரேந்திரன், “இதில் மற்றொரு அதிர்ச்சியூட்டும் தகவலானது இந்த பாலில் உள்ள பொருட்கள் கல்லீரல் புற்று நோயை உண்டாக்கக் கூடியதாகும்.   மேலும் மேலும் இந்த பாலை உட்கொள்ளும் போது அந்த புற்று நோய் மேலும் அதிகரித்து கல்லீரல் வீக்கமேற்பட மிகவும் வாய்ப்பு உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கல்லீரல் புற்றுநோயை உருவாக்கும் அஃப்லாக்டாக்சின் பாலில் இருந்தது இதுவே முதல் முறையாகும்.  இதற்கு முக்கிய காரணம் இந்த கிருமிகள் மாட்டுக் கொட்டாய்கள் சரியாக மற்றும் சுத்தமாகப் பராமரிக்கப்படாததே ஆகும் என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மதுரை மற்றும் சுற்றுப்புறங்களான ஆனையூர், அவனியாபுரம், திருமங்கலம் மற்று திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் இருந்து இந்த  மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.  எனவே இந்தப் பகுதியில் விற்கப்படும் பால் குறித்து மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என மாநில சுகாதார செயலர் தெரிவித்துள்ளார்.   அத்துடன் மேலும் சோதனை நடத்தி தரமற்ற பால் விற்பனை செய்வோரைக் கண்டறியவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article