ஜாதவ் வழக்கு வழக்கறிஞர் செலவு : இந்தியாவுக்கு ரூ 1 பாகிஸ்தானுக்கு ரூ.20 கோடி

Must read

டில்லி

ர்வதேச நீதிமன்றத்தில் ஜாதவ் வழக்குக்கு இந்திய வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ரூ.1 மட்டுமே கட்டணம் வசூலித்துள்ளார்.

இந்திய முன்னாள் கடற்படை வீரர் குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தானில்  உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரணதண்டனை விதித்தது. அவர் குற்றமற்றவர் என வாதிட்ட இந்தியா இந்த தீர்ப்பை எதிர்த்து நெதர்லாந்து நாட்டில் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் நேற்று ஜாதவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.  அதையொட்டி அவர் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் இந்திய அரசின் சார்பாக மூத்த வழக்கறிஞரான ஹரிஷ் சால்வே வாதாடினார். பாகிஸ்தான் அரசின் சார்பாக இங்கிலாந்தைச் சேர்ந்த கவார் குரேஷி வாதாடினார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி அப்போதைய  வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்த சுஷ்மா ஸ்வராஜ் இந்த வழக்கை நடத்த சால்வே ரூ.1 மட்டுமே பெற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அரசு தனது கடந்த வருட நிதிநிலை அறிக்கையில் ஜாதவ் வழக்கை நடத்த வழக்கறிஞர் குரேஷிக்கு ரூ.20 கோடி அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

More articles

Latest article