பெங்களூரு

ர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு ஏஒய் 4.2 என்னும் உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது உலக அளவில் தற்போது பிரிட்டன், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த ஏஒய். 4.2 எனப்படும் டெல்டா பிளஸ் பாதிப்பு, ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல் மற்றும் ரஷ்யாவில் அதிக அளவில் உள்ளது.  தற்போது பல நாடுகளில்  ஏஒய். 4.2 என்ற புதிய உருமாறிய  கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

இந்தியாவில்  இரண்டாவது அலை பரவலுக்குக் காரணமாக, டெல்டா வகையின் ஒரு பகுதியான இந்த வைரஸ் இருந்தது.   இந்த புதிய வகை தொற்று மத்திய பிரதேசத்தின் இந்தூரில் இரண்டு ராணுவ அதிகாரிகள் உட்பட ஏழு பேருக்கு, உறுதியாகி உள்ளது.  இந்த 7 பேரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்.

ஆய்வுகள் இந்த டெல்டா வகை வைரஸ் அடிப்படையில் 55 புதிய உருமாறிய வைரஸ்கள் இருப்பதாகத் தெரிவிக்கின்றன.  அவற்றில் ஒன்றான ஏஒய். 4.2 என்ற வைரஸ் தற்போது தென்பட்டுள்ளதாகத் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் புதிய தொற்று தொற்று ஏற்பட்டவர்களிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியபோது இந்த புதிய வகை தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. புதிய வகை உருமாறிய வைரஸ் எவ்வளவு வேகமாக பரவக்கூடியது என்பது உள்ளிட்ட ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், கர்நாடகாவில் இருந்து சேகரிக்கப்பட்ட இரண்டு மாதிரிகள் உருமாறிய ஏஒய். 4.2 கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆயினும் இப்போது இதற்காகப் பீதி அடையத் தேவையில்லை என்று மாநில சுகாதார அதிகாரிகள், மரபணு நிபுணர்கள் கூறி உள்ளனர்.