டில்லி
நேற்று மட்டும் இந்தியாவில் 15,73,115 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இரண்டாம் அலை கொரோனா பரவலால் இந்தியா கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. நேற்று இந்தியாவில் 2,81,837 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. நேற்று வரை 2,49,65,079 பேர் பாதிக்கப்பட்டு அதில் 2,74,414 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,11,67,746 பேர் குணம் அடைந்து தற்போது 35,12,674 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த பரிசோதனைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. கொரோனா உறுதி செய்யப்படுவோர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணி நடைபெற்று வருகிறது சோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 15,73,315 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இது வரை 31,64,23,658 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் 1,66,812 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.