டில்லி

லக நாடுகளில் இந்தியாவில் மிகவும் குறைவான அளவில் கொரோனா பரிசோதனைகள்  நடப்பதாக உலக சுகாதார மைய விஞ்ஞானி சௌம்யா சாமிநாதன் தெரிவித்துள்ளார்

உலக அளவில் நேற்று வரை 1.87 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.   சுமார் 1.19 கோடி பேர் குணம் அடைந்து தற்போது 60.8 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் மூன்றாம் இடத்தில் உள்ள இந்தியாவில் 19.06 லட்ச,ம் பேர் பாதிக்கப்பட்டு 39,820 பேர் உயிர் இழந்து 12.82 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்திய மருத்துவ ஆய்வுக் குழு கடந்த 3 ஆம் தேதி அன்று சுமார் 6.62 லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளதாகவும் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையான 138 கோடி பேரில் இதுவரை 2.08 பேருக்குச் சோதனை நடந்துள்ள்தக்வும் அறிவித்தது.  இது மிகவும் குறைவானது என உலக சுகாதார மைய விஞ்ஞானி சௌம்யா சாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

சௌம்யா சாமிநாதன், “உலக நாடுகள் ஆன ஜெர்மனி, தைவான்,தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் மிகக் குறைவான எண்ணிக்கையில் கொரோனா  பரிசோதனைகள் நடந்துள்ளன.  மற்ற நாட்டின் மக்கள் தொகை மற்றும் சோதனை எண்ணிக்கை விகிதத்திலும் இந்தியா மிகவும் குறைவாகவே உள்ளது.

சோதனை எண்ணிக்கை குறைவு எனக் கூறப்படும் அமெரிக்காவில் கூட இந்தியாவை விட அதிக விகிதத்தில் பரிசோதனை நடந்துள்ளது.    எனவே நாம் பொதுச் சுகாதார நிறுவனத்துடன் இணைந்து இத்தனை லட்சம் பேருக்கு இத்தனை சோதனை  நடந்தாக வேண்டும் என ஒரு எண்ணிக்கையை முடிவு செய்து அதன்படி பரிசோதனை நடத்த வேண்டும்.

தற்போதுள்ள நிலையில் எந்த ஒரு எண்ணிக்கையையும் முடிவு செய்யாமல் குருட்டாம் போக்கில் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.  தற்போது கொரோனா உறுதியாகும் விகிதம் 5% க்கும் அதிகமாக உள்ளது.  இது அபாயமான ஒன்றாகும்.  அரசு தற்போது போதுமான எண்ணிக்கையில் சோதனைகள் மட்டுமின்றி மருத்துவ வசதிகளையும் அதிகரிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.