இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5.67 லட்சத்தை தாண்டியது

Must read

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,67,536 ஆக உயர்ந்து 16,904  பேர் மரணம் அடைந்துள்ளனர்

 

நேற்று இந்தியாவில் 18,339 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 5,67,536 ஆகி உள்ளது.  நேற்று 417 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 16,904 ஆகி உள்ளது.  நேற்று 13,497 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,35,271 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,15,301 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 5,257 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,69,883 ஆகி உள்ளது  நேற்று 181 பேர் உயிர் இழந்து மொத்தம் 7,610 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,212 பேர் குணமடைந்து மொத்தம் 88,960  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 3,949 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 86,224 ஆகி உள்ளது  இதில் நேற்று 62 பேர் உயிர் இழந்து மொத்தம் 1141 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,212 பேர் குணமடைந்து மொத்தம் 47,749 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 2,084 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 85,161 ஆகி உள்ளது  இதில் நேற்று 57 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,680 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,628 பேர் குணமடைந்து மொத்தம் 56,235 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் நேற்று 626 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 32,023 ஆகி உள்ளது  இதில் நேற்று 19 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,828 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 440 பேர் குணமடைந்து மொத்தம் 23,248 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று 681 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 22,828 ஆகி உள்ளது  இதில் நேற்று 12 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 672 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 698 பேர் குணமடைந்து மொத்தம் 15,506 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

More articles

Latest article