சிட்னி

ந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் கிரிக்கெட் பந்தயத்தில் முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்துள்ள ஆஸ்திரேலியா ஃபாலோ ஆன் செய்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா இந்த பயணத்தில் 4 டெஸ்ட் பந்தயங்களை விளையாடுகிறது. அதில் ஏற்கனவே முடிந்த பந்தயங்களில் இந்தியா 2லும் ஆஸ்திரேலிய ஒன்றிலும் வென்றுள்ளன. கடந்த வியாழன் அன்று தொடங்கிய 4 ஆம் டெஸ்ட் பந்தயத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கில் களம் இறங்கிய இந்திய அணி அபாரமாக விளையாடி 7விக்கட்டுகள் இழப்புக்கு 622 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய வீரர்களில் புஜார 193 ரன்களும் ரிஷன் பந்த் 159 ரன்களும் எடுத்திருந்தனர். அதன் பிறகு ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 300 ரன்கள் மட்டுமே எடுத்தது. குல்தீப் யாதவ் இந்த இன்னிங்சில் 5 விக்கட்டுகளை விழ்த்தி உள்ளார். ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை விட 322 ரன்கள் குறைவாக எடுத்துள்ள்து. ஆகவே ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய அணி ஃபாலோ ஆன் செய்ய அழைத்துள்ளது.