’’சென்னை நகர பேருந்துகளில் 25 பேர் மட்டுமே பயணிக்கலாம்’’
மூன்றாம் கட்ட ஊரடங்கு ஓய்ந்த பின் பொது போக்குவரத்து ஆரம்பமாவது உறுதியாகி விட்டது.
முதல் கட்டமாக நாளை முதல் ரயில்கள் இயங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரில் புறநகர் ரயில்கள் இயங்குவதுடன் , நகரப் பேருந்துகளும் இயக்கப்படுவது உறுதியாகி விட்டது.
ஆனால் கடுமையான நிபந்தனைகள் இருக்கும்.
கொரோனா பரவலைத் தடுக்க சமூக இடைவெளியைக் கடைப் பிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால், ஒரு பேருந்தில் 20 பேர் மட்டுமே உட்கார்ந்து வர அனுமதிக்கப்படுவார்கள்.
நிற்கும் பயணிகள் 6 அடி தூர இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
எனவே ஒரு பேருந்தில் 5 பேர் மட்டுமே நின்று கொண்டு செல்ல முடியும்.
ஆக, சென்னை நகரப் பேருந்துகளில் 25 பேர் மட்டுமே ஒரு சமயத்தில் பயணிக்கலாம்.
வழக்கமாகப் பொதி மூட்டைகள் போல், பயணிகளை ஏற்றிச்செல்லும் பேருந்துகள், இந்த விதிகளை எப்படிக் கடைப் பிடிக்கப் போகின்றன என்பது தெரியவில்லை.
– ஏழுமலை வெங்கடேசன்