வசூலில் தி.மு.க.வை  மிஞ்சிய பா.ம.க…

அரசியல் கட்சிகள், தங்களுக்குக் கிடைக்கும் நன்கொடை விவரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டும்.

தேசிய கட்சிகள் ஏற்கனவே தங்கள் நன்கொடைகளை அளித்து ரசீது வாங்கி விட்டன.

நாட்டில் உள்ள 25 பிராந்திய கட்சிகள் 2018-19 ஆம் ஆண்டில் தாங்கள் பெற்ற நன்கொடை விவரங்களை  இப்போது தேர்தல் ஆணையத்தில் வழங்கியுள்ளன.

கடந்த ஆண்டு மக்களவை தேர்தல் ஆண்டு என்பதால் கட்சிகளுக்குத் தாராளமாகவே நன்கொடைகள் குவிந்துள்ளன.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அதிகம் நன்கொடை வாங்கி இருப்பது, பா.ம.க. தான்.

அந்த கட்சிக்கு 4 கோடியே 19 லட்சம் ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வுக்கு 3 கோடியே 5 லட்சம் ரூபாய் மட்டுமே நன்கொடை கிடைத்துள்ளது.

தே.மு.தி.க. பெற்ற நன்கொடை 6 லட்சம் ரூபாய்.

அ.தி.மு.க. தான் பெற்ற நன்கொடை விவரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் இதுவரை வழங்கவில்லை.

தி.மு.க.வில் இருந்தபோது ’’கணக்கு எங்கே?’’ என்று கேட்டு கலகம் செய்து, தனிக்கட்சி ஆரம்பித்தவரின் கட்சி, இதுவரை தேர்தல் ஆணையத்திடம் கணக்குக் காட்டாமல் இருப்பது, விநோதம் .

– ஏழுமலை வெங்கடேசன்