சென்னை:
மிழகத்தில் சென்னை உள்பட சில மாவட்டங்களில் கொரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில், கொங்குமண்டலமான கோவை ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில்  கடந்த 10 நாட்களாக ஒரு கொரோனா தொற்றுகூட பரவாமல் நீடித்து வருகிறது.  மேலும் 15 மாவட்டங்களில் நேற்று (10ந்தேதி) ஒரு தொற்றுகூட பதிவாகவில்லை.
இது அந்த மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக முதலில் தப்லிகி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்பது தெரியவந்தது. அது கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது கோயம்பேடு சந்தை காரணமாக கொரோனா பரவல் நாளுக்கு நாள் பல மடங்கு பெருகி வருகிறது.
இதன் காரணமாக கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தினமும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது.
நேற்று (10/05/2020) ஒரே நாளில் 669 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், அவர்களில்  509 பேர்  சென்னையை சேர்ந்தவர்கள்.  இதனால் சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த  எண்ணிக்கை 3839ஆக உயர்ந்துள்ளது.  தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 7204ஆகவும் அதிகரித்துள்ளது. தமிழக பாதிப்பில் 50 சதவிகிதம் அளவுக்கு  சென்னையைச் சேரந்தவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் முறையே 47 மற்றும் 43 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதற்கிடையில் தமழகத்தல் 17 மாவட்டங்களில்கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் ஏதும் பதிவாகவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தொடக்க காலத்தில் கொரோனா தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்ட
1) கோவை,
2) ஈரோடு
3) திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக ஒரு பாதிப்பு கூட உறுதியாகவில்லை. இந்த மாவட்டங்கள் இன்னும் சில நாட்களில் பச்சை மண்டலமாகி மாறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
4) தர்மபுரி,
5)திண்டுக்கல்,
6)கள்ளக்குறிச்சி,
7) கன்னியாகுமரி,
8) நாகப்பட்டினம்,
9) நாமக்கல்,
10) நீலகிரி,
11) தஞ்சாவூர்,
12) சேலம்,
13) சிவகங்கை,
14) தென்காசி,
15) திருவண்ணாமலை,
16) திருவாரூர்,
17) தூத்துக்குடி,
18) திருச்சி
ஆகிய 15  மாவட்டங்களிலும் இன்று ஒரு தொற்று கூட உறுதியாகவில்லை