கம்போடியா: ஆபாசமாக நடனம் ஆடிய வெளிநாட்டினர் 10 பேர் கைது

Must read

ஆபாச நடனம் ஆடியதாக கனடாவை சேர்ந்த 2 பேர் உள்பட 10 வெளிநாட்டினர் கம்போடியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிய நாடுகளில் ஒன்றான கம்போடியாவில் கலாச்சாரத்தை பாதுகாக்க முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கம்போடியாவின் அங்கோர் வாட் டெம்பிள் பகுதியில் ஒரு வில்லாவை வாடகைக்கு எடுத்து பப் போல் நடத்தி வந்துள்ளனர்.

சம்பவத்தன்று இந்த வில்லாவை போலீசார் சோதனையிட்டனர். அப்போது அங்கு வெளிநாடுகளை சேர்ந்த பலர் ஆபாச நடனமாடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து அங்கிருந்த பல்வேறு நாடுகளை சேர்ந்த 90 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கு அமைப்பாளர்களாக செயல்பட்ட கனடாவை சேர்ந்த 2 பேர், பிரிட்டனை சேர்ந்த 5 பேர், நார்வே, நியூசிலாந்து, நெதர்லாந்து நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் என 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆபாச நடனம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலான பின்னரே போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்களின் ஆதார அடிப்படையில் இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

More articles

Latest article