மே.வ: 60 ஆண்டுகளில் கம்யூனிஸ்டுக்கு மாபெரும் பின்னடைவு!

கம்யூனிஸ்டு வேட்பாளர் பட்டாச்சார்யா

கல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலத்தின் 60 ஆண்டுகால வரலாற்றில், பாராளுமன்ற மேல்சபையான ராஜ்ய சபாவுக்கு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த எந்தவொரு உறுப்பினரும் தேர்வாக சூழல் உருவாகி உள்ளது. கடந்த 60 ஆண்டு கால வரலாற்றில் இதுவேமுதன்முறை என்று கூறப்படுகிறது.

மேற்கு வங்காள கம்யூனிஸ்டு,  கடந்த திங்கட்கிழமை மேற்கு வங்காளத்தின் இடது முன்னணி வேட்பாளராக பிகாஷ் பட்டாச்சார்யாவை ராஜ்யசபாவுக்கு அறிவித்தது.

ஆனால், பிகாஷ் பட்டாச்சார்யாவின் மனுவ பரிசீலித்த தேர்தல் கமிஷன், அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

இதன் காரணமாக ராஜ்ய சபாவுக்கு மேற்வங்காளத்தில் கம்யூனிஸ்டு உறுப்பினர்கள்  செல்வது தடை பட்டுள்ளது. 60 ஆண்டுகால வரலாற்றில் மேற்கு வங்க மாநிலத்தில் கம்யூனிஸ்டுக்கு இரு மாபெரும் பின்னடைவு என கூறப்படுகிறது.

மேற்கு வங்காளத்தில் இருந்து மேல்சபைக்கு,  திரிணமூல் காங்கிரஸ் சார்பில் 5 பேரும், (டெரெக் ஓ’பிரைன், சுகேந்த் சேகர் ரே, டோலா சென், மனாஸ் புயுயான் மற்றும் சாந்தா சேத்ரி) மற்றும் காங்கிரஸ் சார்பாக ஒருவரும் (பிரதாப் பட்டாச்சார்யா) மாநிலத்தில் இருந்து மொத்தம் ஆறு வேட்பாளர்கள் ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிட்டனர். அவர்கள் 6 பேரும் எதிர்ப்பின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

ஆனால், கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் மனு மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இது குறித்து, தேர்தல் கமிஷன் அளித்துள்ள விளக்க கடிதத்தில், குறிப்பிட்ட காலத்திற்குள், அபிடவிட்கள் மற்றும் பார்ம் 26 ஆகியவற்றை தாக்கல் செய்யவில்லை என்று கூறி உள்ளது.

மேலும் குறிப்பிட நேரத்திற்கு  இரண்டு நிமிடம் கழித்தே அபிடவிட் தாக்கல் செய்ததாகவும், இதன் காரணமாக அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும்  கூறி உள்ளது.

இது இடதுசாரிக்கு எதிரான சதி என்று மேற்கு வங்காள சிபிஎம் தலைவர் சுஜான் சக்ராரதி கூறி உள்ளார்.

இது மேற்கு வங்காளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
In a first, no Left candidates for Rajya Sabha seat from Bengal