இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் இம்ரான் கானின் ஆட்சிக் கவிழ்ந்தது. இதையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷேபாஸ் ஷெரிப் நியமனம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்காரன் அரசு பெரும்பான்மை இழந்த நிலையில்,  நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடத்த உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து நேற்று பாராளுமன்ற கூடிய நிலையில், பல்வேறு சலசலப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.

நீண்ட இழுபறிக்கு பிறகு நள்ளிரவு 12.30 மணிபோல் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு தொடங்கியது. இதன் முடிவுகள் 1.30 மணிபோல் அறிவிக்கப்பட்டன. அதன்படி, 342 பேர் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 174 உறுப்பினர்கள் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதன்மூலம் ஆட்சியில் இருந்து இம்ரான் கான் வெளியேற்றப்பட்டார்.

பாகிஸ்தான் வரலாற்றில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முதல் பிரதமர் இம்ரான் கான் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷேபாஸ் ஷெரிப் நியமனம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.