சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலாகாத இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.  இதுவரை 16முறை அவரது காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில், இன்று  17-வது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ள திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, நெஞ்சுவலிக்காக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், பின்னர் புழல்சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

அவருக்கு ஜாமின் வழங்க, கீழமை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை மறுத்துள்ள நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக அவர் சிறையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில்,.  செந்தில் பாலாஜி  தரப்பில் மீண்டும் ஜாமின்  வழங்கக் கோரி தாக்கல் செய்த மனு  இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.  வழக்கு விசாரணையைத் தொடர்ந்து அவரது நீதிமன்ற காவலை ஜனவரி 31வரை  நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.