சென்னை:
இந்தி திணிப்புக்கு எதிராக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் தாக்கல் என தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வெளியான தகவலில் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் முன் மொழிவார் என்றும், அரசினர் தனித் தீர்மானமாக சட்டப் பேரவையில் தாக்கல் செய்ய முடிவு என்று தெரிய வந்துள்ளது.
இந்தியை அலுவல் மொழியாக மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழு பரிந்துரை செய்திருந்தது என்பதும், இந்தி திணிப்புக்கு எதிராக பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel